4o
தற்போது
மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கடிதம்
கோயம்புத்தூர்-நாகர்கோவில் துரித இரயில் சாத்தூர் இரயில் நிலையத்தில் நிற்று செல்ல விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம்..

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெ.ராம்குமார் (வயது 31 )இவர் அபுதாபியில் உள்ள ஜனா புக் அல் சர்ப் என்கிற ஓட்டலில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
அங்கு கடந்த 04 10 2024 ஆம் தேதி திடீரென இறந்து விட்டார் என்ற அதே ஓட்டலில் வேலை செய்யும் ஜெய்தீ அலிப்தீன் என்பவர் ஊழியர் தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் ராம்குமார் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உதவும் படி அவருடைய தந்தை பெத்தனன் வேண்டுதலின்படி மதுரை விவசாய சங்க தலைவர் முத்து மீரான் 05.10.2024 அன்று என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து ராம்குமார் உடலை இறுதி சடங்கு செய்வதற்காக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களுக்கு அவசர கடிதம் எழுதியதுடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ராம்குமார் உடலை உடனே மதுரைக்கு கொண்டு வர உதவும்படி கேட்டுக் கொண்டேன்.
இந்த துரித நடவடிக்கையை தொடர்ந்து அபுதாயிலிருந்து இந்திய தூதரகம் மூலம் ஓட்டல் ஊழியர் ராம்குமார் உடல் 7 10 2024 அன்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று(10.10.2024) பகல் மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்த டி இராமநாதபுரம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த நடவடிக்கைக்காக ராம்குமாரின் பெற்றோர் மற்றும் ஊர் மக்களும் கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அன்னார் ராம்குமார் ஆத்மா சாந்தி அடையவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஊர் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னார் ராம்குமார் ஆத்மா சாந்தி அடையவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஊர் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.