Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
18
DEC 2025

2030 காமன்வெல்த் விளையாட்டுகள், அகமதாபாத் – இதுகுறித்து நான் லோக்சபாவில் கேட்ட கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் தெளிவல்ல, பொறுப்பற்றது.

மொத்த செலவு எவ்வளவு?
 அரசு பதில்: “ஹோஸ்ட் மாநிலம் மதிப்பீடு செய்துள்ளது”
 தொகை இல்லை
 விவரம் இல்லை
 காலவரையறை இல்லை
எண்கள் இல்லாமல் பாராளுமன்ற கண்காணிப்பு எப்படி?
 தனித்துவமான (Independent) ஆய்வு நடந்ததா?
– உட்கட்டமைப்பு
– வீரர்களுக்கான வசதிகள்
– போட்டிக்குப் பிந்தைய பயன்பாடு
 அரசு: “Due care taken”
 எந்த சுயாதீன அறிக்கையும் பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை.
 மாநிலங்கள், எம்.பிக்கள், விளையாட்டு அமைப்புகளுடன் ஆலோசனை நடந்ததா?
 IOA பொதுக்குழு என்று சொல்லி தப்பிப்பு
 பாராளுமன்ற ஆலோசனை இல்லை
 பாதிக்கப்படும் மாநிலங்களுடன் நேரடி கலந்தாய்வு இல்லை
இது ஜனநாயக நடைமுறை அல்ல.
 செலவு அதிகரிப்பு, தாமதம் – யார் பொறுப்பு?
 அரசு பதில்: மௌனம்
 மத்திய–மாநில நிதிச்சுமை விவரம் இல்லை
 ஆபத்து (risk) மதிப்பீடு வெளியிடப்படவில்லை
வரி செலுத்தும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
 சுற்றுச்சூழல் & சமூக தாக்க ஆய்வு?
 IIM அகமதாபாத் ஆய்வு நடத்துகிறது என அரசு சொல்கிறது
 முடிவுகள் வெளியிடப்படவில்லை
 பொதுமக்கள் ஆய்வு/விமர்சனம் இல்லை
Impact assessment என்பது பெயருக்கு மட்டும் இருக்கக் கூடாது.
சர்வதேச விளையாட்டு விழாக்கள்
 வெளிப்படைத்தன்மை
 பொறுப்புணர்வு
 மாநிலங்களின் பங்கேற்பு
இவையுடன் தான் நடத்தப்பட வேண்டும்.

Contact Us