Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
19
MAY 2026

ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு இன்று உலகமே பதில் சொல்கிறதா?

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி குறித்து கேள்வி கேட்ட ஒவ்வொரு முறையும், BJP அவரை ‘நாட்டுக்கு எதிரானவர்’ என்று தாக்கியது.
ஆனால் இன்று என்ன நடந்தது?
அமெரிக்காவில் நடந்த மோசடி வழக்கே திடீரென கைவிடப்படுகிறது.
இது சாதாரண சட்ட நடைமுறை இல்லை.
இது ஒரே ஒருவரை காப்பாற்ற அரசியல், அதிகாரம், வெளிநாட்டு உறவுகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டதற்கான மிகப்பெரிய சான்று.
இந்தியாவின் பிரதமர் இந்தியாவின் நலனை பாதுகாக்க வேண்டியவர்.
ஆனால் அவர் அதானியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி போல செயல்படுகிறார்.
பாராளுமன்றம் முடக்கப்பட்டது, விசாரணைகள் திசைதிருப்பப்பட்டன, வெளிநாட்டு ஒப்பந்தங்கள்கூட ஒரே தொழிலதிபரை காப்பாற்ற பயன்படுத்தப்பட்டன என்ற சந்தேகம் இன்று மேலும் வலுப்பெறுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அவரையே அவதூறு செய்தவர்கள் இன்று மௌனமாக இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண மனிதர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்திருந்தால், இவ்வளவு வேகமாக அமைப்பு அவரை காப்பாற்ற ஓடியிருக்கும்?
BJPக்கு நாடு பின்னால்.
முதலில் அதானி.

Contact Us