நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான காங்கிரஸ் செயல்திட்ட ஆலோசனை
இன்றைய தினம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினுடைய நாடாளுமன்ற குழுவினுடைய தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களுடைய தலைமையில், காங்கிரஸ் தலைவர் திரு. கார்கே ஜி அவர்கள் முன்னிலையிலும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஜி அவர்களுடைய முன்னிலையிலும் காங்கிரஸ் கட்சியினுடைய பாராளுமன்ற ஸ்டேட்டர்ஸ்ஜி கமிட்டி குழு கூட்டம் நடைபெற்றது.
16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் கொறடா என்ற முறையில் நான் கலந்து கொண்டேன். இந்தக் கூட்டம் ஜன்பத்தில் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியினுடைய நிலையை பற்றி விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இந்த கூட்டத்தொடரை பிரச்சனை அடிப்படையிலே எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றியும், காங்கிரஸ் உடைய நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
