நீட் தேர்வு பிரச்சனை - நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் தேசியத் தேர்வுகள் முகமையின் குளறுபடிகள் ஆகியவை குறித்து உடனடியாக விவாதிக்கக்கோரி, மாணிக்கம் தாகூர் MP ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கான அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளார்.லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதித்துள்ள விவகாரம் இது என்று சுட்டிக்காட்டிய அவர், மக்களவையின் வழக்கமான அலுவல்களை நிறுத்தி வைத்துவிட்டு, இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
