#REJECTMODILIMITATION !
தமிழக மக்களின் உரிமைகளைப் பறித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் கொண்டுவரவுள்ள மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. விஜய் சேகர் தலைமையில் விழிப்புணர்வு அமைதிப் பேரணி நடைபெற்றது. நானும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்கள், அவர்களது நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைப் பிரதிநிதிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அவர்களது நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#REJECTMODILIMITATION
#NoDelimitation
