Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
01
SEP 2026

சென்னை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூட்டம்!



         
இன்று சென்னையில் ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரங்களான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தின் தற்காலிகத் தலைவராக எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹிபி ஈடன் அவர்கள் கலந்துகொண்டு, கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, முக்கிய ஆலோசனைகளை வழங்கினேன். இக்கூட்டத்தின் தொடக்கத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன் சிங் பேடி அவர்களும், நபார்டு (NABARD) அமைப்பின் தலைவரும் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்புரையாற்றினர்.

மாநிலத்தின் நகர்ப்புற கட்டமைப்பை மேலும் மேம்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதி திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

Contact Us