மோடி எதுவும் பேசாமல் இருக்கிறார் !
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஞானேஷ்குமார் நியாயமாக நடப்பதில்லை என்றும், அவர் அமித்ஷாவின் கைப்பாவையாக செயல்படுகின்றார் என்றும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அதை ஒன்றிய பாஜ அரசு சிறிதும் செவிமடுத்து கேட்கவில்லை. பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜ வெற்றி பெறுவதற்காக செய்த தில்லுமுல்லுகள் வெளிவந்துள்ளது. திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன ஆகும் அதுபோலதான் பிரதமர் மோடி, ஞானேஷ்குமார் பிடிபட்டதை பார்த்து அமைதியாக இருக்கிறார்.
-தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
