காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை உடனடியாக கர்நாடகா திறந்துவிட வேண்டும் !
தமிழ்நாட்டிற்கு 4,000 கன அடி வீதம் இன்றுமுதல் (செப்.25) 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறிவருகிறது.
காவிரியில் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நீரில் சுமார் 20 டி.எம்.சி அளவிற்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஏற்கனவே குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது நடைபெற்று வரும் சம்பா சாகுபடியும் பாசன நீரின்றி பெரும் கேள்விக்குறியாகும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
-தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.
